சுடச்சுட

    

    வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 26th January 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் அருகே கொளக்காட்டுப்புதூரில் வீடுகளின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் 5 பவுன் தங்கநகை, பணத்தை திருடிச் சென்றனர்.

    பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே, கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பொங்கியண்ணன் (70). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் குழந்தைசாமி (70). இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றனர். பின்னர், பிற்பகல் இருவரும் வீடு திரும்பினர். அப்போது, இருவரின் வீடுகளின் கதவுகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தன. அதிர்ச்சியடைந்த பொங்கியண்ணன், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரமும், குழந்தைசாமி வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.2 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்கு இருவரும் தகவல் தெரிவித்தனர். இதன்படி, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai