Enable Javscript for better performance
\\\"கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும்'

    By நாமக்கல்,  |   Published on : 27th January 2015 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும் என கிராம மக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், 85-கவுண்டம்பாளையத்தில் சிறப்பு சபை கூட்டம், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்தை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள், சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஆட்சியர் திறந்து வைத்துப் பேசியது: கிராம ஊராட்சிகளில் குடிநீர் வழங்குவது தலையாய கடமையாகும். குக்கிராமங்களிலும் முறையாக குடிநீர் வழங்குவதை ஊராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.

    எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட குளங்கள், ஏரிகள் உள்பட பல்வேறு நீர் நிலைகளிலுள்ள சீமை கருவேல் மரங்கள் அதிகமாக காணப்படுவதால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், வனத் துறையின் அனுமதி பெற்று அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ரூ.12,000 மானிய தொகையைப் பெற்று ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள பணியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் தனி நபர் கழிப்பறைக் கட்ட மக்கல் முன் வர வேண்டும்.

    85-கவுண்டம்பாளையம் ஊராட்சியில் 574 வீடுகளில் கழிப்பறைகள் இல்லையென கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 450 பேர் கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தனி நபர் கழிப்பறை கட்ட ஊராட்சி அலுவலகத்தில் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் ரெ.சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பி.எச்.முருகன், துணைப் பதிவாளர் (பொதுவிநியோகத் திட்டம்) வை.அருணாச்சலம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயசுதா சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாச்சலம், சிவகாமி, ஊராட்சித் தலைவர் எம்.தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai