சுடச்சுட

  

  திம்மராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா

  By ராசிபுரம்  |   Published on : 27th January 2015 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் திம்மராய பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் கோயிலில் தும்பிக்கை ஆழ்வார், விஷ்வக்சேனர், பக்த ஆஞ்சநேயர், கருடாழ்வர் சன்னதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

  விழாவை முன்னிட்டு, கடந்த மூன்று நாள்களாக யானை மீது புனித நீர் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலை கலச புறப்பாடு, யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர கலசத்திற்கு காலை சிவாச்சாரியர்கள் புனிதநீரை ஊற்றினர்.

  தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai