Enable Javscript for better performance
நாமக்கல்லில் மாநில கூடைப்பந்து போட்டி: நாளை தொடக்கம் - Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் மாநில கூடைப்பந்து போட்டி: நாளை தொடக்கம்

    By நாமக்கல்  |   Published on : 27th January 2015 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி புதன்கிழமை (ஜன.28) தொடங்கி, பிப்.1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என, மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் கே.நடராஜன் தெரிவித்தார்.

    நாமக்கல்லில் கூடைப்பந்து சங்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் நடராஜன் பேசியது:

    நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் புதன்கிழமை (ஜன.28) மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

    ஆண்கள், பெண்களுக்கென தனித் தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் நடைபெறும். ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி, சத்தியபாமா, லயோலா, திருச்சி ஒய்.எம்.சி.ஏ., சென்னை எஸ்.டி.ஏ.டி., வருமானவரித் துறை, ஜேப்பியார், ஹிந்துஸ்தான் ஆகிய 8 அணிகளும், பெண்கள் பிரிவில் சேலம் சாய் ஸ்போர்ட்ஸ், சென்னை ஹிந்துஸ்தான், ஈரோடு எல்.எம்.ஆர். பிசி, கோவை பி.எஸ்.ஜி., சென்னை ஸ்லம்ர்ஸ், ரைசிங் ஸ்டார் ஆகிய 6 அணிகளும் பங்கேற்கின்றன.

    நிகழாண்டில் இந்திய அளவில் தலைசிறந்த அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.

    இதில், சங்க நிர்வாகிகள் கந்தகுமார், கே.பி.பாண்டியராஜ், வி.முரளி, கே.கே.பி.சதீஷ், என்,பரத், அம்மையப்பன், ராமகிருஷ்ணன், பாஸ்கர் உள்ளிடோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai