சுடச்சுட

    

    பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 27th January 2015 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கோயிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஜன.27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னம், ரிஷபம், மயில், யானை, குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருதலும், பிப்.1-ஆம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது.

    பிப். 3-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல், 6 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4.40 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழக்கும் விழாவும் நடைபெற உள்ளது.

    பிப்.4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவம், நடராஜர் தரிசனம், சுவாமி மலைக்கு எழுந்தருளல், இரவு சத்தாபரணமும் நடைபெற உள்ளது.

    பின்னர், ஆட்டுக் கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, விடையாற்றி உற்சவம், சர்ப வாகனக் காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.

    விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சாந்தி, தக்கார் முத்துசாமி, ஊர் பொதுமக்கள், விழாக் குழுவினர், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai