Enable Javscript for better performance
புதிய கால்நடை கிளை நிலையங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி, முத்துகாப்பட்டி கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்களை தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி சனிக்கிழமை திறந்துவைத்தார்.

    இந்தக் கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் திறப்பு விழா, பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.கள் கே.பி.பி.பாஸ்கர், சாந்தி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய கால்நடை கிளை நிலையங்களைத் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கி அமைச்சர் பி.தங்கமணி பேசியது: மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைத் தந்தவர் ஜெயலலிதா. ஏழைப் பெண்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காக விலையில்லா தலா 4 ஆடுகள் வழங்கும் திட்டம், கறவைப்பசு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தினார்.

    கால்நடைகளை வழங்குவதுடன் மட்டுமல்லாது அந்தக் கால்நடைகளை நோய் நொடிகளிலிருந்து பாதுகாக்க, அவைகளுக்கு உரிய சிகிச்சைகளை அளித்திட கால்நடை மருந்தகங்களையும், கால்நடை கிளை நிலையங்களையும் அந்தந்தப் பகுதிகளிலேயே அமைத்து கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில், கிராமங்களுக்கு அருகிலேயே கால்நடை கிளை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

    வகுரம்பட்டி ஊராட்சியில் புதிய கால்நடை கிளை நிலையத்தை திறந்து வைத்து 94 பயனாளிகளுக்கு ரூ.12.22 லட்சத்தில் தலா 4 ஆடுகள் வீதம் 376 ஆடுகளையும், ஆதாரச் செலவினத் தொகையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.1.88 லட்சம் காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.

    முத்துகாபட்டி ஊராட்சியில் புதிய கால்நடை கிளை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்தார். கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் ப.சக்திவேல், நாமக்கல்-சேலம் ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் த.ஆர்.சின்னுசாமி, முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. சரோஜா, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், துணைத் தலைவர் கே.சேகர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ப.சரஸ்வதி எஸ்.கலாவதி, மயில்சுந்தரம், சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai