Enable Javscript for better performance
மாணவி தற்கொலை: ஆசிரியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே பள்ளி மாணவி வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    நாமக்கல் அருகே, புதுசத்திரம் காரைக்குறிச்சிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி அம்பிகா (15). கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் படிக்காததால் அவரை ஆசிரியர் ராஜு (47) வகுப்பறையின் வெளியே நிறுத்தியதுடன், பெற்றோரை அழைத்துவருமாறு கூறினாராம். இதனால், மனமுடைந்த மாணவி வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஆசிரியர் ராஜுவை புதுச்சத்திரம் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai