சுடச்சுட

    

    மாவட்ட சட்டப் பஞ்சாயத்து இயக்க ஆலோசனைக் கூட்டம்

    By ராசிபுரம்,  |   Published on : 27th January 2015 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்ட சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அந்த இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெகநாதன் தலைமை வகித்தார். சேகுவேரா நற்பணி மன்றத் தலைவர் ஆர்.ரங்கசாமி வரவேற்றார். கபிலர்மலை இயக்க உறுப்பினர்கள் வி.ரங்கராஜன், பி.செல்வராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.

    இதில், ராசிபுரத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், உறுப்பினராக சேர்ந்தனர். தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை குறித்த சட்டப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    மது ஒழிக்கும் பணிக்காகவும், நாட்டுக்காவும் நாலு பேர் திட்டத்தை உள்ளூர் முக்கிய பிரமுகர் நடத்துதல் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அந்த இயக்கத்தின் ராசிபுரம் நிர்வாகி ஆர்.நவநீதன், கோல்டன் நற்பணி மன்றச் செயலர் ஆர்.இளங்கோ, இயக்க நிர்வாகிகள் ஆர்.பூபதி, ச.குமரேசன், ஆர்.செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai