Enable Javscript for better performance
ரூ.2.04 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.2.04 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

    By நாமக்கல்/ ராசிபுரம்,  |   Published on : 27th January 2015 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 395 பயனாளிகளுக்கு ரூ.2.04 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் விழா கொண்டாடப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து, காவல் துறை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து, நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சிறப்பாக பணியாற்றிய 27 காவல் துறையினருக்கு முதல்வரின் பதக்கங்களையும், 17 காவல் துறை உயர் அலுவலர்கள், காவலர்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 73 அரசு துறை அலுவலர்களைப் பாராட்டி நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

    தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 395 பயனாளிகளுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில், நாமக்கல் மாவட்ட தனியார், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 625 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழல்கேடயமும், பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில், நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா.சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    காந்தி ஆஸ்ரமத்தில் ...:திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதன் கெளரவ துணைத் தலைவர் கே.ஆராவமுதன் தலைமை வகித்தார். அதன் செயலர் கே.சின்னுசாமி வரவேற்றார். ஆஸ்ரம வளாகத்தில் உள்ள ராஜாஜி சிலை, ஆஸ்ரமம் அமைக்க நிலம் வழங்கிய ரத்னசபாபதி கவுண்டர் சிலைக்கு சித்தாளந்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முதன்மை மேலாளர் மல்லிகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தேசியக்கொடி ஏற்றினார்.

    திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விநாயகர் பாடல்கள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டன.

    புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சித்ரா, ஆசிரியர் சின்னுசாமி, பொறியாளர் ராஜமாணிக்கம் ஆஸ்ரம புள்ளி விவர அலுவலர் கே.பி.முத்து, ஊழியர் எல்.சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அரசு அலுவலகங்கள்...:நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவர் ஆர்.தென்னரசு தலைமை வகித்தார். நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. சங்கத் துணைத் தலைவர் கே.நல்லதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.கவிதா சந்திரன் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளியில், பள்ளித் தாளாளர் எம்.கே.குரு தலைமை வகித்து தேசியக்கொடியேற்றினார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

    புதுச்சத்திரம் அருகே, ஸ்ரீகுருகுலம் மாடல், சி.பி.எஸ்.இ. பள்ளியில், அதன் நிர்வாகி எம்.செங்கோடன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, தேசிய நலன் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    பள்ளித் தாளாளர் வி.வெங்கடாசலம், நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    திருச்செங்கோடு நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பொன்.சரஸ்வதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

    ராசிபுரத்தில்...: ராசிபுரம் நகாராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையர் சந்திரசேகர் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தேசியக்கொடி ஏற்றிவைத்து, நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், மேலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ராசிபுரம் - நாமக்கல் சாலையில் உள்ள காந்தி மாளிகை டிரஸ்ட் போர்ட் சார்பில், நடைபெற்ற விழாவுக்கு நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.முரளி தலைமை வகித்தார். அந்த அறக்கட்டளைத் தலைவர் ஏ.எம். சண்முகம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.சிங்காரம் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர். இதில், அந்தக் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் ஏ.சீனிவாசன், மாவட்ட பொது செயலர் மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பரமத்தி வேலூரில்....:பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தளாளர் சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பொருளர் வேலுச்சாமி, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், இயக்குநர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைவர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் முத்துசாமி தேசியக்கொடியை ஏற்றினார்.

    பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தளாளர் நல்லுசாமி தலைமை வகித்து, தேசியக்கொடியை ஏற்றினார். மழலையர் பள்ளியில் நடைபெற்ற விழாவில், செயலர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் இயக்குநர்கள் ராஜா, சக்திவேல், சேகர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையத்தில்....: எக்ஸல் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற விழாவுக்கு துணைத் தலைவர் என்.மதன்கார்த்திக் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சி.சிவக்குமார் வரவேற்றார். மத்திய மரபுசாரா எரிசக்தி துறை முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் தேசியக் கொடியை ஏற்றினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொறியியல் கல்லூரியில் முதல்வர் ஜெ.மாதேஸ்வரன் கொடியேற்றினார். விளையாட்டுத் துறை இயக்குநர் பரத்குமார், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியர் மு.அய்யாசாமி தலைமை வகித்தார். ஆசிரியை கே.ராதா வரவேற்றார். குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வி.தேவராஜன், தட்டாங்குட்டை சிற்றூராட்சித் தலைவர் எஸ்.செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் காந்தி நாச்சிமுத்து தேசியக்கொடியேற்றினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் மணி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் கொடியேற்றினார். துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, ஆணையர் என்.சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துப்புரவு அலுவலர் மணிவண்ணன், மேலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai