சுடச்சுட

    

    வெடி விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு

    By நாமக்கல்  |   Published on : 27th January 2015 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலுôர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரமத்தி வேலுôர் அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள சக்ரபாணி ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மப் பொருள் வெடித்து. இந்த விபத்தில் வள்ளியம்பட்டி புதுôரைச் சேர்ந்த பெரியண்ணன் (70), கருப்பண்ணன் (50), காளப்பநாயக்கன்பட்டி அருகே உத்திரகிரிக்காட்டைச் சேர்ந்த குப்புசாமி (55) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மூவரது உடல்களும் உடல்கூறு பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன.

    மூவரது உடல்களும் திங்கள்கிழமை மாலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிலையில், மூவரது உடலைகளையும் வாங்க உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வெடி பொருள்கள் வெடித்ததால் தான் மூவரும் உயிரிழந்தனர். எரிவாயு கசிவு ஏதுவும் ஏற்படவில்லை. எரிவாயு கசிவு ஏற்பட்டிருந்தால் கடையில் இருந்த ஐந்து எரிவாயு உருளைகளும் வெடித்திருக்க வேண்டும். காவல் துறையினர் இந்த சம்பவத்தை மூடி மறைக்கின்றனர். வெடிவிபத்து என வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடல்களைப் பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தனர்.

    அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா.சீத்தாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பெரியண்ணன் உடலை மட்டும் அவரது உறவினர்கள் திங்கள்கிழமை மாலை பெற்றுச் சென்றனர். மற்ற இருவரின் உடல்களையும் பெற்றுச் செல்ல இரவு வரை உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தனர். அதிகாரிகளின் சமரசத்தையும் ஏற்கவில்லை. இதையடுத்து, உடலைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் கலைந்து செல்ல வேண்டும். கூட்டமாக மருத்துவமனையில் நிற்க கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், கருப்பண்ணன், குப்புசாமி இருவரின் உடல்களும் மருத்துமவனை வளாகத்தில் உள்ளன. இந்த நிலையில், அவர்களது உறவினர்கள் மருத்துவமனைக்கு வருவர் என்பதால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai