சுடச்சுட

    

    ஆர்.கே.லட்சுமண் மறைவுக்கு ராசிபுரத்தில் அஞ்சலி

    By  ராசிபுரம்,  |   Published on : 28th January 2015 02:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் மறைவுக்கு ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
     ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
     ஆர்.கே.லட்சுமணின் பூர்வீகம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் லட்சுமண்.
     நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், பாமக மாணவரணி ஆலோசகர் நல்வினை விஸ்வராஜு, நகர தி.மு.க., செயலர் என்.ஆர். சங்கர், இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்.டி.பாரத்மணி, பி.எம்.வடிவேல், பா.ம.க, நகரத் தலைவர் மாது, தே.மு.தி.க. ஆர்.டி. தர்மராஜ், கோல்டன் நற்பணி மன்றத் தலைவர் நா.குபேர்தாஸ், புரட்சிகர தொழிலாளர் கட்சி மாவட்டச் செயலர் கே.வெங்கடாசலம், நாம் தமிழர் கட்சி நகரச் செயலர் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai