சுடச்சுட

    

    தேசிய சதுரங்கப் போட்டி:  சென்னை வீரர் சாம்பியன்

    By  நாமக்கல்,  |   Published on : 28th January 2015 02:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கலில் நடைபெற்ற தேசிய சதுரங்கப் போட்டியில் சென்னை வீரர் சேகர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
     நாமக்கல் எய்ம்ஸ் செஸ் மற்றும் பார்க்வியூ அகாதெமி சார்பில் 6-வது தேசிய ரேட்டிங் சதுரங்கப் போட்டிகள் கடந்த 22-ஆம் தொடங்கி 26-ஆம் தேதி வரை 5 நாள்களாக நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
     11, 14, 17 வயது அடிப்படையிலும் மற்றும் பொதுப் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
     பொதுப்பிரிவில் சென்னை வீரர் சேகர், 10 சுற்றுகளில் விளையாடி 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு மற்றும் வெற்றிக் கோப்பை, 8.5 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம் பிடித்த ஈரோட்டை சேர்ந்த இனியனுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு, கோப்பையும், 8 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமநாதனுக்கு ரூ.8,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
     11 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்த திருச்சி அபினேஷ், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை கிருத்திகா, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்த திருப்பூர் நவநீதன் ஆகியோருக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை பார்க்வியூ அகாதெமி செயலர் தங்கராஜ் வழங்கி பாராட்டினார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai