சுடச்சுட

  

  நிறுத்தப்பட்டுள்ள உதவித் தொகையை  தகுதியுள்ளோருக்கு வழங்க வேண்டும் :  இ.கம்யூ. கோரிக்கை

  By  குமாரபாளையம்,  |   Published on : 28th January 2015 02:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர், விதவை உதவித் தொகையைத் தகுதியுள்ளோருக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
   கட்சியின் குமாரபாளையம் நகர மாநாடு நகரச் செயலர் எஸ்.ஈஸ்வரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அறிவிக்க வேண்டும். குமாரபாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி கூடுதலாக மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
   நகராட்சி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் வழிப்பறிக் கொள்ளையைத் தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். நகராட்சி மயானத்தில் பொதுமக்களிடம் குறைவான தொகையை வசூலிக்க வேண்டும்.
   நகரில் அனைத்து இறைச்சிக் கடைகளின் கழிவுகளும் கோம்புப் பள்ளத்தில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.
   பழைய முருகன் திரையரங்கு காலியிடத்தின் அருகே செயல்படும் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் குடியிருப்புகள், கோயில் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் அருகாமையில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மதுக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   கூட்டத்தில், நகரச் செயலர் எஸ்.ஈஸ்வரன், துணைச் செயலர்கள் எஸ்.பி.கேசவன், கே.எஸ்.பாலசுப்பிரமணி, எஸ்.காமராஜ், பொருளாளர் ஆர்.மூர்த்தி உள்பட 19 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai