சுடச்சுட

    

    மர்மப் பொருள் வெடி விபத்தில் இறந்தவர்களின்  உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் : முடிவுக்கு வந்த இரண்டு நாள் பரபரப்பு

    By  நாமக்கல்,  |   Published on : 28th January 2015 02:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மர்மப் பொருள் வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை பெற்றுச் சென்றனர். அதனால் நாமக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு நாள்களாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
     பரமத்தி வேலுôர் அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள ஹோட்டலில் கடந்த 25-ஆம் தேதி இரவு மர்மப் பொருள் வெடித்ததில் வள்ளியம்பட்டி புதுôரைச் சேர்ந்த பெரியண்ணன்(70), கருப்பண்ணன் (50), காளப்பநாயக்கன்பட்டி அருகே உத்திரகிரிக்காட்டைச் சேர்ந்த குப்புசாமி (55) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மூவரது உடல்களும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உடல்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து அவர்களது உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க காவல் துறையினர் முடிவு செய்தனர்.
     இந்நிலையில் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், வெடிகுண்டு வெடித்ததால் உயிரிழப்பு நேரிட்டதாகவும் ஆனால் காவல் துறையினர் இதை மறைத்து எரிவாயு உருளை வெடித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் வழக்கை மாற்றியமைத்தால்தான் உடலைப் பெற்றுக் கொள்வதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். அதையடுத்து அவர்களை காவல் துறையினர் சமரசம் செய்தனர்.
     சமரசத்துக்குப் பின், பெரியண்ணன் உடலை மட்டும் அவரது உறவினர்கள் திங்கள்கிழமை மாலை வாங்கிச் சென்றனர். மற்ற இருவரின் உடல்களையும் உறவினர்கள் வாங்காமல் திரும்பச் சென்றனர். அதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
     அசம்பாவிதத்தைத் தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் இருந்த கருப்பண்ணன், குப்புசாமி ஆகிய இருவரது உடல்களையும், அவர்களது உறுவினர்கள் பெற்றுச் சென்றனர். அதனால் மருத்துவமனை வளாகத்தில் இரண்டு நாள்களாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai