Enable Javscript for better performance
முட்டை உற்பத்தி  அதிகரிக்க வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    வெப்ப நிலை சீராக இருக்கும் என்பதால், முட்டை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
     நாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுத்த மூன்று நாள்களுக்கு வானம் பொதுவாகத் தெளிவாகவும். மழையற்றும் காணப்படும். மேலும், வெப்பநிலை சீராக இருக்கும் என்பதால், வரும் நாள்களில் கோழிகளில் தீவன எடுப்பு இயல்பாகவும், நல்ல முட்டை உற்பத்தியும் காணப்படும். முட்டை உற்பத்தியைத் தக்க வைக்க, நன்கு உலர்ந்த தீவன மூலப்பொருள்களையும், பூஞ்சை நச்சற்ற தீவனத்தைப் கோழிப்பண்ணையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai