சுடச்சுட

  

  சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

  பள்ளி வளாகத்தில் அண்மையில் நடந்த விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் மு.ஆ.உதயக்குமார் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் எம்எல்ஏ ஆர்.சாந்தி, முன்னாள் மாணவர் முத்துசாமி, திருக்குறள் தங்கவேலனார் ஆகியோர் பேசினர்.

  6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக, இறுதித் தேர்வில் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், பாட வாரியாக 100 சதவீதத் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு, சேந்தமங்கலம் அன்னை கல்வி அறக்கட்டளை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ரூ.85 ஆயிரம் மதிப்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

  உதவித் தலைமையாசிரியர் ப.முத்துசாமி, அன்னை அறக்கட்டளைத் தலைவர் பழனிமுத்து, பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் அ.வைத்தியலிங்கம், தொழிலதிபர் எஸ்.செங்கோடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai