சுடச்சுட

  

  பரமத்திவேலூர் வட்டம், கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையத்தில் சுகாதாரத் துறை சார்பில், முழு சுகாதார தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  நாமக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெமினி அறிவுரையின்படி, வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையில் பெரியசோளிபாளையம் பகுதியில் முழு சுகாதார தூய்மைப் பணி நடைபெற்றது.

  பெரியசோளிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மணி முழு சுகாதாரப் பணிகளைத் தொடக்கிவைத்தார். கபிலர்மலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி மேற்பார்வையில் சுகாதாரப் பணியாளர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து, கிராமங்கள் தோறும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, நோய்த் தடுப்பு மருந்துகள் போட்டனர்.

  சாக்கடையில் தேங்கிக் கிடந்த குப்பைகள், பயன்படாத டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இந்தப் பணிகளில் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம ஊராட்சி மன்றப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai