சுடச்சுட

    

    அறிவியல் இயக்கத்தால் சிறந்த ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோவையில் மாநில அளவிலான ஆசிரியர் இணைய மாநாடு, அறிவியல் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாணவர், பள்ளி, சமூக முன்னேற்றத்தில் ஈடுபாட்டுடன் செயல்படும் சிறந்த ஐந்து ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

    அதில், நாமக்கல் மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் பரிந்துரையின் பேரில், மலையாம்பாளையம் ஊராட்சிப் பள்ளி ஆசிரியர் செந்தில், புதுவலவு ஊராட்சி பள்ளித் தலைமையாசிரியர் செல்வக்குமார், மேலப்பட்டி ஊராட்சி பள்ளி உதவித் தலைமையாசிரியர் இளங்கோ, குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜேந்திரன், குருக்கப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்றவர்களை நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் ஞானஜோதி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயலர் சுரேந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai