சுடச்சுட

    

    சோளத்தட்டு ஏற்றி வந்த டிராக்டர் மின் கம்பியில் உரசியதில் தீ விபத்து

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 29th January 2015 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் சோளத்தட்டு ஏற்றி வந்த டிராக்டர் மின் கம்பியில் உரசியதில், அது அறுந்து சோளத்தட்டில் தீப் பற்றி எரிந்தது. இதில், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டு தீயில் எரிந்து நாசமானது.

    பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பனம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் தனது கால்நடைகளுக்காக கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தில் இருந்து சோளத்தட்டுகளை தனது டிராக்டரில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை கோப்பனம்பாளையம் நோக்கி வந்தார்.

    பரமத்திவேலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல்மேட்டில் இருந்து கோப்பனம்பாளையம் செல்லும் சாலையில் திரும்பினார். அப்போது டிராக்டரில் சோளத்தட்டை அதிக உயரமாக அடுக்கியிருந்ததால், அந்தப் பகுதியில் உள்ள மின் கம்பியில் உரசியது.

    இதில், மின் கம்பி அறுந்து சோளத்தட்டின் மீது விழுந்தது. இதனால், திடீரென சோளத்தட்டு தீப் பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மின் வாரியத்தினருக்கும், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த மின் வாரியத்தினர் மின்சாரத்தை நிறுத்தி பெரும் விபத்தைத் தடுத்தனர். மேலும், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    இதில், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள சோளத்தட்டுகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தினால் வேலூரில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai