சுடச்சுட

    

    நாமக்கல் பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

    By நாமக்கல்  |   Published on : 29th January 2015 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்தத் தகவலைத் தொடந்து, சம்பந்தப்பட்ட பேக்கரிகளை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

    அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், பாஸ்கர், ராமசுப்பு, சங்கர்நாராயணன், செந்தில், ராமசாமி ஆகியோர் நாமக்கல் பேருந்து நிலையம், மோகனூர் சாலை, திருச்சி சாலை, ரெங்கர் தெரு, கடைவீதி, துறையூர் சாலைகளில் இயங்கி வரும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சில பேக்கரிகளில் காலாவதியான ரொட்டி, கேக், முட்டை, குடிநீர் கேன்களை தரையில் கொட்டியதோடு, தரமற்ற பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரித்தனர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் கு.தமிழ்ச்செல்வன் கூறியது: நகரம் முழுவதும் உள்ள பேக்கரிகளில் ஆய்வு செய்து வருகிறோம்.

    முட்டைகள், ரொட்டி, கேக், குடிநீர் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பேக்கரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai