Enable Javscript for better performance
நாளை தியாகிகள் தினம்: மெளன அஞ்சலி செலுத்த ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    நாளை தியாகிகள் தினம்: மெளன அஞ்சலி செலுத்த ஆட்சியர் வேண்டுகோள்

    By நாமக்கல்,  |   Published on : 29th January 2015 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டின் சுதந்திரத்துக்கு அரும்பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் வெள்ளிக்கிழமை ( ஜன.30 ) இரண்டு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய சுதந்திரத்துக்கு அரும்பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில், ஜனவரி 30ஆம் தேதியை தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அன்று பகல் 11 மணி முதல் 11.02 மணி வரை இரண்டு நிமிஷம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், தொழில்சங்கங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம், தனியார் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மெளனம் அனுசரிக்க வேண்டும். அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு நிமிஷம் சாலை ஓரமாக நிறுத்தி மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai