சுடச்சுட

  

  ராசிபுரம் வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் கீழ் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

  இதில், பள்ளித் தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளிகளின் மக்கள் தொடர்பு அலுவலர் கே.எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில், தமிழ்த் துறை சார்பில், சங்க இலக்கியம், மூலிகைகள் குறித்து விளக்கும் வகையிலான படைப்புகள், சமூக அறிவியல் துறை சார்பில், வரலாற்றுத் தலைவர்கள், முக்கிய நிகழ்வுகள், பழங்கால உலக அளவிலான நாணய வகைகள், உலக அளவில் பிரசித்தி பெற்ற ஓவியங்கள் போன்றவை இடம்பெற்றன. கணிதத் துறை சார்பில், கணிதமும் வாழ்க்கையும் என்ற தலைப்பில், கணிதம் எப்படி வாழ்க்கைக்கு உதவும் என்பதை விளக்கும் படக்காட்சிகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். அறிவியல் துறை சார்பில், காடுகள், வெப்பமயமாதல், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், காற்றாலை மின் உற்பத்தி முக்கியத்துவம் போன்றவை இடம் பெற்றன.

  இதில், பள்ளித் தலைவர் எஸ்.கணேசன், செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர் ஆர்.யு.சிற்றரசன், பொருளாளர் பழனிவேல், இயக்குநர்கள் கே.சி.சந்திரசேகர், மாரிமுத்து, பள்ளிகளின் முதல்வர்கள் சபிஅகமது, கார்த்திகேயன், ஜேம்ஸ் டேனியல் அற்புதராஜ், மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai