சுடச்சுட

    

    பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கச் சட்டத் திருத்தம்

    By நாமக்கல்,  |   Published on : 29th January 2015 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என, தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.

    நாமக்கல் மாவட்ட தேமுதிக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலர் சம்பத்குமார் தலைமையில் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மகளிரணி செயலர் செல்வி வரவேற்றார். மாநில மகளிரணி செயலர் சிவகாமி கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துப்

    பேசினார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: டாஸ்மாக் மதுபானக் கடைகளால் லட்சக்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்படாமல் இருக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அளவில் தலா 5 மகளிர் கொண்ட பூத் கமிட்டி உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கட்சியின் நகரச் செயலர் வெங்கடாசலம், மகளிரணி செயலர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai