சுடச்சுட

    

    பொம்மம்பட்டியில் 31-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

    By நாமக்கல்  |   Published on : 29th January 2015 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொம்மம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த ஊராட்சியில் 1.4.2013 முதல் 31.3.2014 வரையிலான காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பணிகள், அதன் பயன்கள் பயனாளிக்குச் சென்றடைந்த விவரங்கள், திட்டத்தின் நோக்கம் ஆகியவை குறித்து ஆராய்ந்து தணிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    சமூக வல்லுநர்கள் சாந்தி, சக்திவேல் மற்றும் கிராம சமூகத் தணிக்கையாளர்கள் இணைந்து இந்த தணிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணி வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இறுதி செய்யப்பட்ட தணிக்கை அறிக்கை 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு பொம்மம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபையில் பொதுமக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும்.

    பொதுமக்கள் இச்சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று, இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்த ஆலோசனை வழங்கலாம் என ஊராட்சித் தலைவர் மணி, எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai