சுடச்சுட

  

  மாநில கூடைப் பந்து :முதல் லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி வெற்றி

  By நாமக்கல்,  |   Published on : 29th January 2015 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப் பந்துப் போட்டியின் முதல் நாளில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

  நாமக்கல் கூடைப் பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை இரவு தொடங்கியது.

  போட்டியை என்எஸ்ஐடி முருகேசன் தொடக்கிவைத்தார். முதல் நாள் போட்டியில், ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், சென்னை லயோலா கல்லுôரி அணியும் மோதின. அதில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. அதையடுத்து, திருச்சி ஒய்எம்சி அரைஸ் அணியும், சென்னை சத்தியபாமா யூஎன்ஐ அணியும் மோதியது.

  அதேபோல, பெண்கள் பிரிவில் முதல் நாளில் சென்னை சிலாமர்ஸ் பிசி அணியும், ஈரோடு எல்எம்ஆர் பிசி அணியும் மோதியது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றுள்ளன. அந்த அணிகளை ஏ, பி என இரு பிரிவுகளாகப் பிரிந்து, போட்டி நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai