சுடச்சுட

    

    வெண்ணந்தூரில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    By ராசிபுரம்,  |   Published on : 29th January 2015 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரத்தை அடுத்துள்ள வெண்ணந்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள மயான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

    வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரை பகுதியில் 1.25 ஏக்கர் பரப்பில் மயானம் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏரியைச் சுத்தப்படுத்தும் போது, தாற்காலிகமாக மயானத்தில் சடலம் புதைக்கத் தடை செய்யப்பட்டது. மேலும், மயானப் பகுதியையொட்டி, வீடுகள், சாய ஆலைகள் கட்டப்பட்டிருந்தன. இதில் இருந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதால், மயானத்தைச் சீரமைக்கும் பணி பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது பேரூராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு வந்ததால், ஏரிக்கரை, மயானம் போன்ற பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    ராசிபுரம் துணை வட்டாட்சியர் செல்வராஜ், வெண்ணந்தூர் பேரூராட்சித் தலைவர் எஸ்.என்,கே.பி.செல்வம், வருவாய் ஆய்வளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நில அளவை அலுவலர்கள், மயானத்துக்கு 1.26 ஏக்கர் நிலத்தை வரையறை செய்து, மயானப் பயன்பாட்டுக்காக பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai