சுடச்சுட

  

  அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வால் மக்கள் அவதி

  By நாமக்கல்  |   Published on : 30th January 2015 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

  திருச்செங்கோடு நகர திமுக சார்பில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம், நகரச் செயலர் நடேசன் தலைமையில் திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜவேல் வரவேற்றார்.

  முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு பேசியது: ஹிந்தி மொழித் திணிப்பை முழு மூச்சோடு எதிர்த்தது திமுக தான். ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர், பலர் குண்டடிபட்டனர். ஹிந்தித் திணிப்பு எதிர்த்துப் போராட்டத்தில் உயிரை இழந்த தியாகிகளுக்கு வீர வணக்கநாள் கொண்டாடுகிறோம்.

  தமிழக முதல்வர் எந்த முடிவு எடுக்கவும் தயங்குகிறார். தமிழகத்தில் பால், மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்றார்.

  நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் கே.எஸ்.மூர்த்தி, தலைமைக் கழகப் பேச்சாளர் கண்ணன், தேர்தல் பணிக்குழுச் செயலர் இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் நடனசபாபதி, நகர அவைத் தலைவர் முரசொலிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில், நகரப் பொருளாளர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai