Enable Javscript for better performance
எம்பிஏ, எம்சிஏ மாணவிகளுக்கு ரூ.ஒரு கோடி ஊக்கத்தொகை- Dinamani

சுடச்சுட

    

    எம்பிஏ, எம்சிஏ மாணவிகளுக்கு ரூ.ஒரு கோடி ஊக்கத்தொகை

    By நாமக்கல்  |   Published on : 30th January 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் எம்பிஏ, எம்சிஏ சேரும் மாணவிகளுக்கு ரூ.ஒரு கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்தக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    எம்பிஏ, எம்சிஏ பாடப்பிரிவுகளுக்கான மாணவியர் சேர்க்கைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் 50 இடங்களைப் பெறுபவர்களுக்கு 100 சத கட்டணச் சலுகையும், அடுத்த 50 இடங்களை பெறுபவர்களுக்கு 50 சத கட்டணச் சலுகையும், அடுத்த 50 இடங்களைப் பெறுவோருக்கு முதல் தவணைக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எஸ்.அர்த்தனாரீஸ்வரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

    இரண்டாவது ஆண்டாக தகுதித் தேர்வின் அடிப்படையில் மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 1,500 பேர் பங்கேற்றனர். அதில் 163 பேருக்கு சேர்க்கை அளிக்கப்பட்டது.

    தகுதித் தேர்வுக்கு வருபவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி காலை 8 மணிக்கு நாமக்கல், ராசிபுரம், எடப்பாடி, ஈரோடு, சேலம், மேட்டூர், கரூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து கல்லூரி வளாகம் வரை இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    கலை, அறிவியல், பொறியியல் பாடப்பிரிவுகளில் இளநிலை படிப்பை நிறைவு செய்த மாணவிகள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.

    பொது அறிவு, கணிதத் திறன், காரண ஆய்வு தொடர்பான கொள்குறி வினாக்கள் தேர்வில் இடம்பெற்றிருக்கும்.

    போட்டித் தேர்வில் பங்குபெற ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ண்ம்ள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் மாணவிகள் பதிவு செய்யலாம்.

    மேலும் விவரங்களுக்கு, 9578043740, 9578043760 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai