சுடச்சுட

    

    ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, வட்டத் தலைவர் ரா.ரெங்கதாசரி தலைமை வகித்தார். கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியர் திட்டத்திற்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு, கருணைத் தொகை ரூ.1000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்டத் தலைவர் என்.ராமசாமி, செயலர் அ.பழனிமுத்து, பொருளர் ஜோதிமாரிமுத்து, பி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.வரதராஜன், மாநிலத் தலைவர் எம்.கண்ணன், பொருளர் எம்.சதாசிவம், செயலர் எஸ்.ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai