சுடச்சுட

    

    கருமனூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம்

    By நாமக்கல்,  |   Published on : 30th January 2015 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், கருமனூர் ஊராட்சியில், சிறப்பு மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் ஒவ்வொருவரும், ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அக் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை, தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஓராண்டு காலத்திற்குள் செய்து முடித்து, மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் நாமக்கல் மாவட்டம், கருமனூர் ஊராட்சியைத் தேர்வு செய்தார்.

    ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், நடந்த இம்முகாமில், வேளாண்மைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கூட்டுறவுத் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பால்வளத் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், இத்திட்டம் குறித்து விளக்கிக் கூறினர்.

    கருமனூர் கிராம மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் பெற்றுக் கொண்டார்.

    முகாமின் நோக்கம் குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி பேசினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai