சுடச்சுட

    

    குழந்தைகளை நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்

    By நாமக்கல்  |   Published on : 30th January 2015 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகளை நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில், கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா, புதன்கிழமை நடைபெற்றது.

    இதில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசியது:

    வாழ்க்கையில் முன்னேற எது நம் பலம், பலவீனம் என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும்.

    எந்த ஒரு செயலையும் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல, எதை நினைக்கிறாயோ, அதுவாகவே நீ ஆகிறாய் என்ற கருத்துக்கேற்ப வாழ வேண்டும்.

    மாணவர்களுக்கு அறிவு, ஒழுக்கம் ஆகிய இரண்டும் அவசியம் தேவை.

    இக்காலத்தில் பெற்றோர், தங்களது குழந்தைகளைத் தொடர்ந்து படி, படி என்று சொல்கிறார்கள்.

    ஆனால், அவர்களை நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லி வளர்ப்பதில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர்தான் முதல் ஆசிரியர். ஆசிரியர், இரண்டாவது பெற்றோர் என்பதை மனதில் கொண்டு, பெற்றோரும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, மாணவர்களின் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இவ்விழாவில், பள்ளி ஆலோசகர் ராஜன், தலைவர் ராஜா, துணைத் தலைவர் நல்லையன், செயலர் சிங்காரவேலு, முதல்வர் சகுந்தலா, தமிழ் வழிப்பிரிவு தலைமை ஆசிரியர் குமாரசாமி, கல்வியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிமேகலை, மத்திய பள்ளி முதல்வர் சொக்கலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai