சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில், கொசு ஒழிப்புப் பணியில், 740 தாற்காலிகப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

    பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் சார்பில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாமக்கல் நகராட்சியில் புதன்கிழமை நடந்தது.

    முகாமைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில், 740 தாற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில், காய்ச்சல் அதிகம் உள்ளவர்களின் பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டதாலும் அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாலும் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலை இருந்தது.

    தற்போதும் அனைவரும் ஒருங்கிணைந்து, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    முகாமில், சுகாதாரப்பணி துணை இயக்குநர் இரா.ஜெமினி, மருத்துவர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai