Enable Javscript for better performance
தனியார் ரத்த வங்கிகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் - Dinamani

சுடச்சுட

    

    தனியார் ரத்த வங்கிகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்

    By நாமக்கல்,  |   Published on : 30th January 2015 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் ரத்த வங்கிகள் வணிக நோக்கத்தில் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி.

    நாமக்கல் அரசுத் தலைமை மருத்துவமனை சார்பில், தன்னார்வ ரத்த தான ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நாமக்கலில் புதன்கிழமை நடைபெற்றது.

    குடும்ப நலத் துறை துணை இயக்குநர் இன்பசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெமினி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை மருத்துவர் ராஜ்மோகன் வரவேற்றார்.

    ரத்த தான ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது: கடந்த ஆண்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மூலம் 81 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம், 4,659 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில், 4,334 யூனிட் ரத்தம் தேவையானவர்களுக்கு இலவசமாகச் செலுத்தப்பட்டு, நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தனியார் ரத்த வங்கிகள் வணிக நோக்கத்தில் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

    அரசு ரத்த வங்கி அலுவலர் அன்புமலர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai