சுடச்சுட

    

    தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம்

    By ராசிபுரம்,  |   Published on : 30th January 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத் தொழிலாளர் நல வாரிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் ராசிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    மாவட்டத் தொழிலாளர் நல அலுவலர் சி.மஞ்சள்நாதன் தலைமையில், தொழிலாளர்களின் மனுக்களை பெற்று பரிசீலித்து பதிவு செய்தனர். இம்முகாமில், ராசிபுரம் தாலுகா கட்டுமான மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்தும்,, பதிவைப் புதுப்பித்தும் கொண்டனர்.

    கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம் ஆகியவற்றிற்கான நிதி உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai