சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் சந்தையில் கொப்பரை விலை உயர்வு

    By பரமத்தி வேலூர்,  |   Published on : 30th January 2015 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கொப்பரை ஏல சந்தையில், கொப்பரை விலை உயர்ந்துள்ளதால், தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரமத்தி வேலூர், கரூர் மாவட்டத்தில் இருந்து, கொப்பரையை ஏலம் விடுவதற்காக, பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில், சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் குழு மையம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், கொப்பரை, கிலோ ஒன்றுக்கு ரூ.90.15 வீதம் ஏலம் போனது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், கிலோ ஒன்றுக்கு ரூ.95.72 வீதம் ஏலம் போனது.

    இந்த விலை உயர்வால், தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai