சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சேவை: ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

    By குமாரபாளையம்  |   Published on : 30th January 2015 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியருக்கு வாய்ப்பளித்து, சிறந்த கல்விச் சேவை மற்றும் வழிகாட்டுதலுடன் செயல்பட்டதற்கு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இக்கல்லூரியானது, கடந்த 2008-09 கல்வியாண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறது.

    இதன் மூலம், 82 பேர் கல்வி கற்றதோடு, அவர்களுக்குச் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால், தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர் கொள்ளும் திறனையும், வாழ்க்கையில் உயர்ந்து நிற்கவும் வழிவகைகள் செய்து தரப்பட்டுள்ளது.

    நாளை தமிழ்ச் சங்கஅறக்கட்டளையின் முப்பெரும் விழா

    பரமத்தி வேலூர் தமிழ்ச் சங்க அறக்கட்டளையின் முப்பெரும் விழா சனிக்கிழமை (ஜன. 31) நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    அறக்கட்டளையின் கெளரவத் தலைவர் புலவர் சின்னு தலைமை தாங்குகிறார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பொது மேலாளர் (ஓய்வு) கார்த்திகேயன் முன்னிலை வகிக்கிறார்.

    அறக்கட்டளைச் செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். கே.எஸ்.மணியம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சு.செந்தில்குமார் சிறப்புரையாற்றுகிறார்.

    அறக்கட்டளைத் தலைவர் இரவீந்திரன் ஏற்புரை நிகழ்த்துகிறார். விழாவில், பேராசிரியர் சண்முகவடிவேல், இன்பம் மலரும் என்ற தலைப்பில் விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.

    அறக்கட்டளைப் பொருளர் ந.செந்தில்குமரன் நன்றி கூறுகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai