சுடச்சுட

  

  வங்கிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்த அறிவுறுத்தல்

  By நாமக்கல்  |   Published on : 30th January 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி வங்கியில், நகைகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க வங்கிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

  வங்கிகளின் பாதுகாப்புக் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

  வங்கிகளின் பாதுகாப்புக் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

  மேலும், வங்கிகளின் பாதுகாப்புத் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

  வங்கிகள் ஒவ்வொரு கிளைக்கும் இரவுக் காவலரை நியமிக்க வேண்டும். வங்கிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கிக் கட்டடங்களில் உள்ள கதவுகள், ஜன்னல்கள் பாதுகாப்பாக உள்ளனவா எனச் சோதித்து, அவைகளைச் சரிசெய்ய வேண்டும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு, அதிகளவில் இரவு ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

  வங்கி சுற்றுப் புறங்களில் போதிய விளக்குகள் பொருத்த வேண்டும். வங்கி சுற்றுப் புறங்களில் உள்ள புதர்கள் மற்றும் செடிகளை அகற்ற வேண்டும்.

  அனைத்து வங்கிகளும் அங்கீகரிக்கப்பட்ட அளவில் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில்

  டி.எஸ்.பி.க்கள் மனோகரன், ராஜு, அர்ஜுனன், ராஜேந்திரன், இந்தியன் வங்கியின் மண்டல துணைப் பொது மேலாளர் தங்கவேல், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai