சுடச்சுட

    

    10ஆம் வகுப்பு தேர்வுப் பணி படியை 3 மடங்கு உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 30th January 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    10ஆம் வகுப்பு தேர்வுப் பணி, விடைத்தாள் திருத்தும் பணிக்கான படியை 3 மடங்கு உயர்த்தி வழங்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்குகின்ற அனைத்துப் படிகளையும் தமிழக அரசும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். வட்டார வள மையங்களில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர்களை உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக நியமித்ததை திரும்பப் பெற வேண்டும்.

    10ஆம் வகுப்பு தேர்வுப் பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உழைப்பூதியம், படிகளை தற்போது வழங்குவதைக் காட்டிலும் 3 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டத் தலைவர் செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சரவணமுத்து, மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்டத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai