Enable Javscript for better performance
இறந்த மயில்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    இறந்த மயில்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை

    By பரமத்தி வேலூர்  |   Published on : 31st January 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் அருகே, இறந்த மயில்களை வனத்துறையினர் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனை செய்தனர்.

    பரமத்தி வேலூர் அருகே நெட்டையாம்பாளையம் மணல்மேடு பகுதியில், மர்மமான முறையில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்தன. தகவலின் பேரில், அங்கு வந்த வனத்துறையினர் மயில்களின் உடல்களை மீட்டு கபிலர்மலை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கால்நடை மருத்துவர் ராஜா, பரிசோதனை செய்து மயில்கள் செரிமானத்தன்மை குறைவால் மயில்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

    பரமத்தி வேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில், அதிக அளவில் மயில்கள் உள்ளதால், இப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் அவற்றின் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள்

    தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai