சுடச்சுட

  

  காவிரிக் கரையில் வழிபாட்டுக்கு குவிந்த பக்தர்கள்

  By குமாரபாளையம்,  |   Published on : 31st January 2015 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவிரிக் கரையோரத்தில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பேரண்டராலு எனப்படும் பிரமாண்ட குலதெய்வ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  விழாவை முன்னிட்டு, பெண்களுக்கு சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டன. குமாரபாளையம் பட்டத்தரசியம்மன் கோயிலிலிருந்து பால்குடம், சுப மங்களப் பூஜைப் பொருள்கள் கூடையுடன் புறப்பட்ட திருவீதி உலா, காவிரி ஆற்றங்கரையில் முடிவடைந்தது.

  கி.பி. 1565-ம் ஆண்டு மொகலாய மன்னர்களுடன் நடைபெற்ற போரில் தங்களின் கணவர்கள் வீரமரணம் அடைந்த தகவல் கேட்டு, மஞ்சள் குங்குமத்துடன் அக்னிப்பிரவேசம் செய்து உயிர்நீத்த ரங்கம்மாள், கிருஷ்ணம்மாள் ஆகியோருக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவர்கள், நீண்ட ஆயுள் பெற வழிபாடு நடத்தினர். கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சந்திரசேகரன், மணி, ராஜாராம் உள்ளிட்டோர் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai