Enable Javscript for better performance
கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வகுப்பாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காரைக்குறிச்சியைச் சேர்ந்த 15 வயது மாணவி, காரைக்குறிச்சிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். திருப்புத் தேர்வுக்கு ஆசிரியர் அனுமதிக்காததால் கடந்த 23ஆம் தேதி வகுப்பறையில் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார், வகுப்பாசிரியர் ராஜூ (47) என்பவரைக் கடந்த 26 ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து, அந்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.கோபிதாஸ் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai