சுடச்சுட

  

  வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும் என்பதால் கோழிகளின் தீவன எடுப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  அடுத்த நான்கு நாட்களுக்கு, வானம் தெளிவாகவும், மழையற்றும் காணப்படும். இதனால், வெப்ப அளவுகள் குறைந்த அளவுகளிலேயே இருக்கும் என்பதால், கோழிகளின் தீவன எடுப்பு இயல்பைவிட அதிகமாக இருக்கும். இதனால், முட்டையின் எடை மற்றும் அளவுகள் உயர்ந்து, ஓட்டின் தரம் குறைய வாய்ப்புள்ளது.

  எனவே, தீவன எடுப்பைப் பொறுத்து, தீவனத்தில் எரிசக்தியை உயர்த்தியோ அல்லது குறைத்தோ கொடுக்க வேண்டும்.

  கோழியின ஆய்வகத்தில், கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும், இறக்கை அழுகல் நோய் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களினால் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

  இதனால் பண்ணையாளர்கள், தீவன மூலப்பொருட்களில் கிளாஸ்ட்ரிடியம் கிருமியின் மாசுபாடு உள்ளனவா என ஆய்வகத்தில் ஆய்வு செய்து, தரமான மூலப்பொருட்களை உபயோகப்படுத்துவதுடன், பண்ணை உயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai