சுடச்சுட

    

    மணல் லாரிகளால் ஏற்படும் விபத்து, போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் மணல் லாரிகள், நாமக்கல் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தடை உத்தரவு, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) முதல் அமலுக்கு வருகிறது. நாமக்கல் நகரில் மணல் லாரிகளால் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் குறித்து காவல்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், மணல் லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தற்போது செல்லும் வழியான மோகனூர், வளையப்பட்டி, திப்ரமாதேவி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் வழியாக, புதன்சந்தை தேசிய நெடுஞ்சாலையில் சேரும் தடத்தில் மட்டும் 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.

    நாமக்கல் நகருக்குள் வர, அனுமதிச்சீட்டு வைத்துள்ள மணல் லாரிகள், இரவு 10 மணியிலிருந்து காலை 8 மணிவரை நகரச் சாலைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாவட்டங்களுக்கு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள், 24 மணி நேரமும் நாமக்கல் நகருக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருவதால், மணல் லாரிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க, நெடுஞ்சாலை ரோந்துக் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai