Enable Javscript for better performance
மயில்களால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு இல்லை- Dinamani

சுடச்சுட

  

  மயில்களால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு இல்லை

  By நாமக்கல்,  |   Published on : 31st January 2015 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பறவையினங்களால் ஏற்படும் பயிர்சேதத்திற்கு, இழப்பீடு வழங்கப்படமாட்டாது என்ற வனத் துறையின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வே.ரா.சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

  இதில், பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

  ராசிபுரம் உழவர் சந்தையில் தண்ணீர் வசதி இல்லை. ஏற்கனவே, போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு வறண்டு விட்ட நிலையில், புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேளாண் துறை நிதி ஒதுக்கீடு செய்து 3 ஆண்டு

  களாகியும், நகராட்சி தடையில்லாச் சான்று வழங்காததால் ஆழ்குழாய் கிணறு அமைக்க முடியவில்லை.

  தூத்துக்குடி - தருமபுரி உயரழுத்த மின்பாதை பணிகளுக்காக, சேதமான தென்னை மரங்களுக்குக் குறைவான இழப்பீடே வழங்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

  2013 - 2014 ஆண்டுக்கு அரசு அறிவித்த, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,650 விலையை, நிலுவை வைத்துள்ள பள்ளிபாளையம் பொன்னி சர்க்கரை ஆலையால், நடப்பு அரைவைப்பருவத்துக்குக் கரும்பை வெட்ட முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம், கடந்த 2007-2008ஆம் ஆண்டில் மானியக் கடன் திட்டத்தில், ஆழ்குழாய் கிணறு அமைத்தவர்களில் 31 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடனைக் கட்டச் சொல்லி வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. ஏரி, குளங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

  மயில்களால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்க முடியாது என்று வனத்துறை அறிவித்துள்ளது.

  மயில்களால் சேதம் அதிகரித்துவரும் நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

  விவசாய கிணறுகளில் இருந்து சொந்தத் தேவைக்கு தண்ணீர் எடுத்துச்சென்றால் மின்வாரிய கண்காணிப்பு அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். பல கிராமங்களில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாத நிலையில், தண்ணீர் எடுத்துச்செல்ல அபராதம் விதிப்பதை, ரத்து செய்ய வேண்டும்.தேவராயபுரத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவர், கடந்த டிசம்பர் மாதம் நெல் பயிருக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்ததில், 3 நாள்களில் அப்பயிர் கருகி வீணானது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர்.

  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஆட்சியர் பேசியது: ராசிபுரம் உழவர் சந்தையில், ஆழ்குழாய் கிணறு அமைக்க நகராட்சி ஆணையர் உடனடியாக தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என உத்தரவிடப்படும்.

  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 2007-2008ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மானிய கடன் திட்டத்தில், ஆழ்குழாய் கிணறு அமைத்து இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ள 31 பேருக்கு, விரைவில் மின் இணைப்பு வழங்க

  நடவடிக்கை எடுக்கப்படும்.

  சொந்தத் தேவைக்கு தண்ணீர் எடுத்துச்செல்வதை, தடை செய்யக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

  பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai