சுடச்சுட

    

    மலை கிராமத்திற்கு தலைச்சுமையாக மின் கம்பம்: கூலி கேட்கும் மலைவாழ் மக்கள்

    By ராசிபுரம்,  |   Published on : 31st January 2015 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் அருகேயுள்ள போதமலை கிராம மின் வசதிக்காக, தலைச்சுமையாக எடுத்துச்செல்லப்படும் மின் கம்பங்களுக்கு மின்வாரியம் கூலி வழங்க வேண்டுமென மழைவாழ் மக்கள் வலியுறுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது போதமலை கிராமம். இங்கு கீழுர், மேலூர், கெடமலை என மூன்று குக்கிராமங்களில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பாதை வசதி, மின்வசதி, குடிநீர்த் திட்டம் போன்றவை இல்லாத இந்த மலைக்கிராமத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டு, முதன்முறையாக மின்வசதி செய்து தரப்பட்டது. இந்த மலைக்குக் கொண்டு செல்லத் தேவையான மின் கம்பங்கள் தலைச்சுமையாகவே மலைவாழ் மக்களால் அப்போது எடுத்துச்செல்லப்பட்டன.

    தற்போதும் மின் கம்பம் அமைக்கும் பணிக்கு, தொடர்ந்து மலை வாழ் மக்களையே மின்வாரியம் பயன்படுத்தி வருகிறது. இதற்கான கூலி எதுவும் கொடுக்கவில்லை என மலைகிராம மக்கள் கூறினர். 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு கம்பம் எடுத்துச்செல்ல 20 பேர் தேவை என்ற நிலையில், இதனை தலைச்சுமையாக மலைகிராமங்களுக்கு எடுத்துச்செல்லும் மலைவாசிகளுக்கு, கூலி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai