Enable Javscript for better performance
ராசிபுரம் காந்தி மாளிகையில் காந்தி நினைவு தினம்- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் காந்தி மாளிகையில் காந்தி நினைவு தினம்

    By ராசிபுரம்  |   Published on : 31st January 2015 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் காங்கிரஸ் கட்சியின் டிரஸ்ட்போர்டு சார்பில், காந்தி மாளிகையில் மகாத்மா காந்தியின் 68-வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

    இதில், நகர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் ஆர். ராமமூர்த்தி தலைமை வகித்தார். காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன், தீண்டாமை உறுதி மொழி வாசித்தார். நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கே.ராமசாமி, டி.மோகன்

    ராஜூ, காங்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகம், மாவட்ட செயலர் ஆர்.மெய்ஞானமூர்த்தி, நகர செயலர் கே.மாரிமுத்து, காந்தி மாளிகை டிரஸ்ட்போர்டு உறுப்பினர்கள் ஜெயபால்ராஜ், பி.ராமலிங்கம், எஸ்.கே.பி.எம்.வடிவேல், கே.கதிர்வேல், கே.மாதவன், வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகாத்மா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில், காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாணவியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai