சுடச்சுட

  

  ரூ.27 லட்சம் மோசடி:புதுச்சேரி வியாபாரி மீது வழக்கு

  By நாமக்கல்  |   Published on : 31st January 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லுங்கி உற்பத்தியாளருக்கு ரூ.27 லட்சம் பணம் தர மறுத்த, புதுச்சேரி வியாபாரி மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராவுத். லுங்கி உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த கமல்அகர்வால் என்பவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் ரூ.29 லட்சத்துக்கு லுங்கி கொடுத்ததாகவும், பொங்கல் பண்டிக்கைக்கு முன் பணம் தருவதாகக் கூறிய அவர் இதுவரை ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு மீதிப் பணத்தைத் தர மறுக்கிறார், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமாரிடம், கோவிந்தராவுத் அண்மையில் புகார் அளித்தார். நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கமல்அகர்வால் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai