சுடச்சுட

  

  160 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 3,349 மகளிர்க்கு, தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

  புதுவாழ்வுத்திட்டத்தின் சார்பில் மகளிர்க்கான தற்காப்புக்கலை பயிற்சி துவக்க விழா, புதுவாழ்வு மனநலத் திட்ட கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டி சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தலைமை வகித்த ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது,

  பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளும், குடும்ப வன்முறைகளும், உடல் மற்றும் மன ரீதியான தாக்குதலும் ஆங்காங்கே நடந்தவண்ணம் உள்ளது. இதைத் தடுப்பதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  2014-15ஆம் ஆண்டு தமிழக அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களில், முன்னோடித் திட்டமான, புதுவாழ்வுத் திட்டத்தில் செயல்படும் அனைத்து கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி என்ற புதிய அறிவிப்பு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, இதற்காக ரூ.4.50 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில், புதுவாழ்வுத் திட்டம் செயல்படும் எருமப்பட்டி, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, மல்லசமுத்திரம், கொல்லிமலை, எலச்சிப்பாளையம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள, 160 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களைச் சேர்ந்த 1,600 உறுப்பினர்கள், 159 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 1,749 உறுப்பினர்கள் என மொத்தம் 3,349 மகளிர்க்கு ரூ.5 லட்சம் செலவில் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

  இப்பயிற்சியின் வாயிலாக, உடல்பயிற்சி, கராத்தே மற்றும் ஜுடோ நுணுக்கங்கள், பலவீனங்களைப் பலமாக மாற்றும் ஆற்றல், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன், துணிச்சல், அபாயகரமான சூழ்நிலையில் பயமின்றி, துணிச்சலுடன் எதிராளியை கைகளால், ஆயுதங்களால் தாக்கும் ஆற்றலும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன்களையும் மகளிர் பெற்றிடுவார்கள் என்றார். எருமப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த 24 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.13.36 லட்சம் நிதியினையும், திப்பரமாதேவி ஊராட்சி அலங்காநத்தம் களப்பகுதியில், 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, வலையப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் ரூ.10.25 லட்சம் கடனுதவிக்கான காசோலையையும் ஆட்சியர் வழங்கினார். இவ்விழாவில், புதுவாழ்வுத்திட்ட மாவட்ட மேலாளர் த.தேவகுமார், செயலர் விக்னேஸ்வரி, தற்காப்புக்கலை பயிற்சியாளர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai