சுடச்சுட

  

  51 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

  By நாமக்கல்,  |   Published on : 31st January 2015 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் நகரப் பகுதியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளை வணிக ரீதியாகப் பயன்படுத்தியது தொடர்பாக 51 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

  நாமக்கல் பகுதியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளை வணிகரீதியாகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்தது. அதுதொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி உத்திரவிட்டார். அவரது உத்திரவின்படி, நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

  நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள தனியார் உணவு விடுதியில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை, வணிக சமையல் எரிவாயு உருளைக்கு மாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதையடுத்து, உணவு விடுதிகள் மற்றும் டீக்கடைகளில் சோதனை நடத்தி விதிமுறைகளை மீறிப் பயன்படுத்தப்பட்ட மேலும் 21 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினம் கூறியது:

  வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளை வாங்கி, அதில் உள்ள எரிவாயுவை 17.2 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைக்கு மாற்றம் செய்து, விற்பனை செய்யப்படுகிறது.

  இதுபோல, எரிவாயுவை மாற்றுவது ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதுபோன்ற முறைகேட்டில் எவரேனும் ஈடுபடுவது தெரிந்தால், வட்ட வழங்கல் அலுவலரை 94450 00233 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai