Enable Javscript for better performance
அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் உயர வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த 48 மணி நேரத்துக்கு வெப்ப நிலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்பைத் தடுக்கவும், இழப்புகளைக் குறைக்கவும் பொதுமக்கள், பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்.

     தாகம் இல்லாவிட்டாலும் கூட போதுமானளவு குடிநீர் குடிக்க வேண்டும். வெள்ளை நிற பருத்தி ஆடைகள், எடை குறைந்த, தளர்வான ஆடைகள், காலணிகளை தவறாமல் அணிய வேண்டும். குளிர் கண்ணாடி, குடை, தொப்பி போன்றவற்றை தவறாது பயன்படுத்த வேண்டும்.

     உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் வேலைகளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தவிர்க்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும்போது தவறாமல் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். உடல் நீரைகுறைக்கும் மது, காபி, கார்பன் கலந்த குளிர்பானம், டீ போன்றவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

     புரதச்சத்து அதிகம் உள்ள உணவு, நாள்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே வேலைக்கு செல்ல வேண்டிய திருந்தால் குடையை பயன்படுத்தவும். மேலும் கழுத்து, தலை, முகம் ஆகியவற்றை ஈரத்துணியால் மூடிக்கொள்ளவும்.

     நிறுத்திய வாகனத்திற்குள் குழந்தைகள், செல்ல பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம். மயக்கம் வருவது போல உணர்ந்தால் அல்லது உடல் சோர்வுற்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். உப்புக்கரைசல்,மோர், லெஸ்ஸி, அரிசி கஞ்சி, எலுமிச்சை ஜூஸ் போன்ற உடம்பில் நீர்அளவை அதிகப்படுத்தும் பானங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

     கால்நடைகள்,செல்லப் பிராணிகளை நிழலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும், அதிகளவில் நீர்அருந்தக் கொடுக்கவும். இரவு நேரங்களில் ஜன்னலை திறந்து வைக்கவும், வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள திரைச்சீலைகள்,  சூரியகதிர்கள் நேரடியாக உள்ளே வராதவாறு தடுப்புகளை வைக்க வேண்டும்.

     மின் விசிறியை பயன்படுத்துவதுடன், ஈரத்துணியை உடலில்  போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai